வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2017 (17:28 IST)

சனிப் பெயர்ச்சி பொது பலன்கள் - 12 ராசிகள் (2017 - 2020)

நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின்  மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் அழைக்கப்படுகிறார்.
சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து  வித கர்மாக்களுக்கும் குரு. நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் - ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றிக்கும் அதிபதி  அதாவது காரகன் சனியாவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள்ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான்  பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம். சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள்: உழைப்பு, சமூக  நலம், தேச தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில்  தேர்ச்சி, எண்ணைக் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். கிரக வரிசையில் ஆறாவதாக  வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம்  சனி கிரகமாகும். 
 
குருவிற்கு பார்வை பலமும் சனிக்கு ஸ்தான பலமும் சொல்லப்பட்டிருக்கிறது. நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகளில் இருக்கும் தடை  தாமதத்தை நமக்கு உணர்த்தும் கிரகம் சனியாகும். சனி இருக்கும் கிரகத்தை வைத்தே ஒருவரது வாழ்வில் இருக்கும்  தடைகளை தெரிந்து கொள்ள இயலும். சனி எங்கு இருக்கிறாரோ அதற்குண்டான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நாம்  தடைகளை அகற்ற முடியும். 
 
சனியின் பலம்: சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும்  அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை  பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
 
நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 - சாலிவாகன சகாப்தம் 1939 - பசலி 1427 - கொல்லம் 1193ம் ஆண்டு  ஸ்வஸ்தி்ஸ்ரீஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 4ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி  19.12..2017 சுக்ல ப்ரதமையும் செவ்வாய்கிழமையும் மூலா நக்ஷத்ரமும் வ்ருத்தி நாமயோகமும் பவ கரணமும் அமிர்தயோகமும்  கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.45க்கு - காலை 9.59க்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு  (வாக்கியப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில்  சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் மகர ராசிக்கு விகாரி வருடம் பங்குனி மாதம் 15ம்  தேதி - 28.03.2020 - சனிக்கிழமையன்று உதயாதி நாழிகை 22.54க்கு மாறுகிறார். தனுசு  ராசியில் இருந்து தனது மூன்றாம்  பார்வையால் கும்ப ராசியையும் - ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் - பத்தாம் பார்வையால் கன்னி ராசியையும்  பார்க்கிறார். சனி  பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட  இருக்கும் இடத்தின் பலமே அதிகம். 
 
பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:
 
நன்மை பெறும் ராசிகள்: மேஷம் - கடகம் - சிம்மம் - துலாம்.
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கும்பம் - மீனம்.
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம் - மிதுனம் - கன்னி - விருச்சிகம் - தனுசு - மகரம்.