சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

Sani peyarchi
சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன. 
செய்ய வேண்டியவை:
 
தினமும் சூரியன் எழுவதை தரிசித்து மூன்று முறை சூரியனுக்கு நல்லெண்ணெய் பூமியில் வார்க்கலாம். பின்பு மூன்று முறை  நீர் வார்க்கவும்.
 
தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து, சிறு உருண்டைகளாக மூன்று பிடித்து  வைக்கலாம். பின்பு நாய்க்கு உணவிடவும்.
 
முடிந்த பொழுது சிவன் கோவில்களை சுத்தம் செய்தல் நலம். ஒவ்வொரு சனி இரவு 8-9 வேளையில் அரச மரத்தடியில்  இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வரலாம்.
 
அமித்திஸ்ட் கற்கள் சனிக்கு மிகுந்த ப்ரீதி செய்பவை-வெள்ளியில் அணிந்து பயன் பெறலாம்.
 
சனிக்கு ஹோமம் மற்றும் சனி யந்திரம் வைத்து கொள்வது நலம் தரும். கருப்பு எள்ளு, உளுந்து மற்றும் சர்க்கரை சேர்த்து  பொடி செய்து தினமும் எறும்புகளுக்கு இட்டு வரலாம்.
 
உணவில் அதிகம் மிளகு சேர்த்து கொள்ளலாம். மேலும் காலை உணவிற்க்கு முன் மூன்று கருப்பு மிளகு கடித்து சுவைத்து  உண்டு வரவும்.
 
தினசரி தூங்கு முன் கை மற்றும் கால் விரல்களின் நகங்களில் கடுகு அல்லது நல்லெண்ணெய் அழுத்தி தேய்த்து வரலாம்.
 
தினசரி ஒரு சர்க்ககம் சுந்தர காண்ட பாராயணம் மிகுந்த நன்மை தரும்.


இதில் மேலும் படிக்கவும் :