1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சனி பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.
வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 19, காலை 9:59 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2020  டிசம்பர் 20 வரை இந்த ராசியில் இருப்பார். ராகு, கேது பெயர்ச்சி 2019, பிப்ரவரி 13ல் நிகழ்கிறது. ராகு, கடக ராசியில் இருந்து  மிதுனத்திற்கும், கேது மகரத்தில் இருந்து தனுசுக்கும் மாறுவர். 2020 ஆகஸ்டு 31ல் ராகு, மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கும்,  கேது தனுசுவிலிருந்து விருச்சகத்திற்கும் இடம் பெயர்வர்.
 
சனிப்பெயர்ச்சி பலன்களைக் கணிக்கும்போது, சனியை மட்டும் கணக்கில் கொண்டால் போதாது. குரு, ராகு நிலைகளையும்  கவனத்தில் கொல்ல வேண்டும். ஏனெனில் இவர்கள் சனி தரும் பலன்களை மாற்றும் வல்லமையுள்ளவர்கள். இவற்றைக்  கணக்கிட்டு பலன் எழுதப்பட்டுள்ளது. சிலருக்கு சுமாரான பலன் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரவர் ஜாதகத்தில் தசாபுத்தி  சிறப்பாக இருந்தால், நல்ல பலன் கிடைக்கும். பரிகாரத்தை அவரவர் வசதிக்கு ஏற்ப செய்தால் போதும்.