புதன், 18 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

நன்மை தீமைகளை வழங்கும் சனிபகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் புதுகாரகம் என்று தனியே வழங்கப்பட்டுள்ளது. அது தவிர ஒவ்வொரு  லக்னத்திற்கும் தனித்தனியே ஆதிபத்திய பலம் என்று மாறுபட்டு இருக்கும். அந்த வகையில் சனி பகவானுக்கு ஆயுள்காரகன்,  கர்மகாரகன் என்ற மிக முக்கியமான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
தீர்க்காயுள், பூரண ஆரோக்கியம், சகல செளபாக்கியங்களுடன், நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பது எல்லோரும் விரும்பௌவதுதான். இந்த மூன்ரையும் அருள்பவர் சனிபகவான். இவர் நியாயவான், தர்மவான் நீதிமான் என போற்றப்படுகிரார். ஏழை, பனக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் எல்லோரும் இவருக்கு சமமானவர்களே. அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ப தன்னுடைய தசா காலங்களிலும், பெயர்ச்சிக் காலங்களிலும் அவரவர்களின் யோக, அவயோகங்களுக்கு ஏற்ப பலா பலன்களை அருள்கிறார். இவருடைய ஆற்றலை பற்றி ஜோதிட சாஸ்திரத்திலும் புராணங்களிலும், இவருடைய பெருமைகள்  சொல்லப்பட்டுள்ளது.
 
எல்லா கிரகங்களும் நம் கர்மவினைக்கேற்ப, பூர்வ புண்ணிய பலத்திற்கோ நன்மை, தீமைகளை வழங்குகின்றன.