பணத்தட்டுப்பாட்டை நீக்கும் லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி...?

லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில்  பூராட்டாதி  நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். 
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை  5 மணி முதல் இரவு 8  மணி வரை குபேர காலமாகும். இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேரன்  தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தைப் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை  விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால்  பணத்தட்டுப்பாடு இருக்காது.
 
பூஜை செய்யவேண்டிய நாள், வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றவேண்டும். முதலில் மகாகணபதியை  மனதார வெண்டிகொள்ளுங்கள்.
பிறகு கீழே தரப்பட்டுள்ள படத்தில் உள்ளதுபோல் கட்டங்களை வரைந்து எண்களையும் எழுதுங்கள். கட்டத்தை குங்குமத்தாலும், எண்களை  அரிசிமாவாலும் எழுதுவது சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “ஸ்ரீ” எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம்.  இந்த கோலத்தின் பெயர் குபேர எந்திர கோலம் ஆகும். இதை வரைந்த பிறகு கட்டங்களின் உள்ளே எண்களுக்கு பக்கத்தில் ஒரு நானயம்  வையுங்கள். நாணயம் எண்களை மறைப்பதுபோல் வைக்கக்கூடாது. ஆகையால் அதற்கு ஏற்றாற்போல் கட்டங்களை முன்பே  வரைந்துகொள்ளுங்கள்.
 
நாணயம் மகாலட்சுமியின் அடையாளம் ஆகையால் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தளியிருப்பதாக ஐதீகம். பூஜை செய்ய சிறிது உதிரிப்பூக்களை, வரையப்பட்டுள்ள பலகையை பூஜை அறையில் வைத்து பின்பு அதற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி, பால் அல்லது பாயாசம்  சமைத்து படைக்கலாம். பிறகு செல்வம் சேரவேண்டும் என்று மகாலட்சுமியிடம் மனதார வேண்டிக்கொண்டு மந்திரத்தை கூறுங்கள். பிறகு  குபேரனை நன்கு வேண்டிக்கொண்டு தீபாராதனை காட்டி பூஜை முடித்துக்கொள்ளலாம்.
 
குபேர எந்திரத்தில் வைத்த நானயங்களை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டு, ஒரு ஈர துணி கொண்டு எந்திரம் வரையப்பட்டுள்ள பலகையை  துடைத்துவிடுங்கள். இவ்வாறு ஒன்பது வாரமோ அல்லது மாதமோ பூஜை செய்து சேரும் நாணயத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை  அல்லது பெளர்ணமி அன்று சிவன் கோவிலில் உள்ள உண்டியலில் போட்டுவிடுங்கள்.
 
இந்த பூஜை செய்வதால் உங்கள் வீட்டில் நிச்சயம் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும்  நிலைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :