செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2025 (18:01 IST)

ஆடி மாதம்: சுமங்கலி பூஜைக்கான வழிபாட்டு முறைகள் மற்றும் முக்கிய மந்திரங்கள்!

ஆடி மாதம்: சுமங்கலி பூஜைக்கான வழிபாட்டு முறைகள் மற்றும் முக்கிய மந்திரங்கள்!
ஆடி மாதம் தொடங்கிவிட்டால் இல்லறப் பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், கன்னியர்  மனதிற்குப் பிடித்த எதிர்காலத் துணை அமையவும், சுமங்கலி பூஜைக்கு தயாராகி வருகின்றனர். இந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
 
சுமங்கலி பூஜை செய்யும்போதும், தினசரி மாங்கல்யத்திற்கு குங்குமம் இடும்போதும், "ஓம் தீர்க்க சுமங்கலி தேவியை, இரட்சிப்பாய் இரட்சிப்பாய்" என்ற மந்திரத்தை மனமுருகிச் சொன்னாலே போதும்.
 
நெற்றியில் குங்குமம் இடும்போது, "ஓம் மஹிமா சக்தியை திலக தேவியை பூரண சக்திதா நமோ நமஹ" என்ற மந்திரத்தையும், நெற்றி வகிட்டில் குங்குமம் இடும்போது, "ஓம் யாதேவி சர்வ பூதேஷூ ஸ்ரீம் ஐம் க்லீம் சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை யோகம் இரட்சிப்பாய் இரட்சியப்பாய் நமோ நமஹ" என்ற மந்திரத்தையும் உச்சரித்தால், கணவரின் ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.
 
சுமங்கலி பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம் காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை ஆகும். காலையில் பூஜை செய்ய முடியாதவர்கள், மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்யலாம்
 
ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று சுமங்கலி பூஜை செய்ய இயலாதவர்கள், ஆடி வெள்ளிக்கிழமையிலும் இந்தப் பூஜையை செய்து பலன் பெறலாம்.
 
Edited by Mahendran