வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By

சிவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்களின் பலன்கள்

பசும்பால் - நீண்ட ஆயுள் தரும், பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும், பஞ்சா மிருதம் - பலம், வெற்றி தரும், தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி, நெய் - முக்தியளிக்கும், சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும், இளநீர் - நல் சந்ததியளிக்கும், கருப்பஞ்சாறு -  ஆரோக்கியமளிக்கும். 
நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும், சாத்துக்குடி - துயர் துடைக்கும், எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம், திராறஷ -  திடசரீரம் அளிக்கும், வாழைப்பழம் - பயிர் செழிக்கும், மாம்பழம் - செல்வம், வெற்றி தரும், பலாப்பழம் - மங்கலம் தரும்,  யோகசித்தி, மாதுளை - பகை நீக்கும், கோபம் தவிர்க்கும், தேங்காய்த்துருவல் - அரசுரிமை, திருநீறு - சகல நன்மையும் தரும்,  அன்னம் - அரசுரிமை, சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும், பன்னீர் - சருமம் காக்கும், கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும், சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்.
 
நன்னீர் - தூய்ப்பிக்கும், நல்லெண்ணை - நலம் தரும், பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும், மஞ்சள் தூள் - நல் நட்பு  வாய்ப்பிக்கும், திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்.