நவகிரகங்கள்: 12 ராசிகளுக்கான அதிபதிகளின் விபரங்கள் !!
சூரியன்: காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
சந்திரன்: பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி.
அங்காரகன் (செவ்வாய்): இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர். மேஷம், விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
புதன்: இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
குரு: இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர். தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதி.
சுக்கிரன்: இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதி.
சனி: இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
ராகு: இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப்படுபவர்.
கேது: இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும், செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.