செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ராகு கேதுவால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட சொல்லவேண்டிய மந்திரம்...!

ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் ராகு, கேதுவால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
ராகு காயத்ரி:
 
நாக த்வஜாய வித்மஹே!
பத்ம ஹஸ்தாய தீமஹி!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!
 
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்யா போற்றி.
 
கேது மூல மந்திர ஜபம்:
 
"ஓம் ச்ரம் ச்ரீம் ச்ரௌம் ஷக் கேதவே நமஹ", - 40 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.
 
தொண்டு: வியாழனன்று நன்கொடையாக கருப்பு மாடு அல்லது கருப்பு கடுகு கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: வியாழக்கிழமை.
பூஜை: கணேச பூஜை.
ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும். 
 
கேது காயத்ரி:
 
அச்வ த்வஜாய வித்மஹே!
சூல ஹஸ்தாய தீமஹி!
தந்நோ கேது ப்ரசோதயாத்!
 
கேதுத் தேவே கீர்த்தி தேவே 
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய் 
வாதம் வம்பு வழக்குகளின்றி 
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி. 
 
ராகு கேதுவின் நாமங்களை தினமும் துதிப்பவர்களுக்கு. அவர்கள் அனுகிரகத்தால் சகல பிரச்சனைகள், தீராத வியாதிகள் மற்றும் தொல்லைகளிலிருந்து விடுபடுவர். தனம், தான்யம், பசுக்கள் ஆகிய செல்வங்கள் பெருகி சௌபாக்கியம் உண்டாகும். மேலும் எண்ணற்ற  ஐஸ்வர்யம், தான்யம், பசுக்கள் ஆகியவை பெற்று உயர்வர்.