கேது தோஷத்தை போக்குவதற்கான சிறந்த பரிகாரம்...!

கேது பகவான் ஒருவரின் ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால் அந்த நபருக்கு திடீர் பொருளாதார சரிவு, மனகுழுப்பம் அதிகம் ஏற்படுவது, பெயர்  புகழ் கெடுவது, குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம், எப்போதும் மனதில் ஒரு பதட்டத்தன்மை மற்றும் சோகம் ஆகியவை கேது பகவானின்  கெடுதலான நிலையால் ஏற்படும் சில பாதிப்புகளாகும். 
கேது கிரகத்தின் தீய பலன்கள் ஏற்படாமல் தடுத்து, நற்பலன்களை பெற கேது கிரக சாந்தி பரிகார பூஜை செய்வது சிறந்ததாகும். வைடூரியத்தை வெள்ளியில் செய்யப்பட்ட மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது கேது பகவானின் நல்லாற்றலை உங்களுக்கு பெற்று  தரும். 
 
விநாயக பெருமான் கேது கிரக பாதிப்புகளை நீக்க கூடியவர். சனிகிழமைகளில் விநாயக பெருமானை வழிபட்டு வருவது கேது தோஷத்தை  போக்கும் சிறந்த வழியாகும். 
 
ராகு – கேது கிரகங்களுக்குரிய சிறந்த பரிகார தலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலாகும். சனிக்கிழமை தினத்தில் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று கேது கிரகத்திற்கான கேது பரிகார பூஜையை செய்து சிவபெருமானை வழிபட்டால் கேதுவின் தோஷம் நீங்கும். 
 
கேது பகவான் “ஞானகாரகன்” என்பதால் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் ஒரு சித்தரின் சமாதி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.


இதில் மேலும் படிக்கவும் :