1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

மாசி மாத அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசையில் தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து முன்னோரை ஆராதித்து, அவர்களை வணங்கினால் நாமும் நம் சந்ததியினரும் வளமுடன்  வாழ்வோம் என்பது உறுதி. முக்கியமாக, பித்ரு சாபம் இல்லாமல் பெருமகிழ்ச்சியுடன் வாழலாம்.
அந்த வகையில் இந்த மாதத்தின் அமாவாசை நாளான இன்று முன்னோர்களுக்கு ஆராதனை, தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்தால்  பித்ருக்களின் ஆசியைப் பெறலாம். மாசி மாத அமாவாசையானது சதய் நட்சத்திரத்தன்று வருமானால், அது பித்ருக்களுக்கு மிகவும்  திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும்.
 
மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத் தரும். இந்த அமாவாசை நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால், பதினாயிரம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன் கிடக்கும்.
 
மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வந்தால், அந்த நன்னாளில் சிரார்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக துங்குவார்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது. அதனால் நாமும் நம் முன்னோர்களை வழிபாடு செய்து கடவுளின் அருளையும், முன்னோர்களின் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெற்றுக்கொள்வோம்.
 
மாசி அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து முன்னோரை ஆராதித்து, அவர்களை வணங்கினால், வாழ்வில் துன்பங்கள் இன்றி வாழலாம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கலாம். இவ்வாறு செய்தால்  அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி கிடைக்கும்.
 
நம் முன்னோர்கள் காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம் அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியமான  நிகழ்வாகும்.