1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (17:47 IST)

ஆன்மிக சாஸ்திர குறிப்புகள் சிலவற்றை தெரிந்துக்கொள்வோம் !!

Spirituality
செவ்வாய் கிழமை எவரிடமும் கடன் வாங்குவதும், பத்திரத்தில் கையாழுத்திடவும் கூடாது.


முதல் திருமணம் செய்வதற்கு கார்த்திகை மாதம் கூடாது. மறுமணம் செய்வதற்கு கார்த்திகை மாதம் சிறந்தது.

சந்திரன் ரோகினியில் சஞ்சாரம் செய்யும் காலத்தில், அந்த நட்சத்திர நாழிகையில் பாதியை நீக்கி, மீதியிருப்பதில் முதல் பாதியில் எந்த காரியம் செய்தாலும், தடை, தாமதம் இல்லாமல் வெற்றி கிடைக்கும்.

கனவில் சுடுகாட்டைக் கண்டால் விரைவில் திருமணம் உண்டாகும்.

வீட்டின் இடது புறத்தில் இருக்கும் மரங்களை விட, வலதுபுறத்தில் இருக்கும் மரங்கள் உயர்வாக இருக்க வேண்டும்.

ஜீவன் தந்தையிடமிருந்து விந்து வடிவாய் தாயிடம் செல்வது முதல் பிறப்பு. தாயிடமிருந்து இந்த பூமியில் பிறப்பது இரண்டாவது பிறப்பு. பூமியிலிருந்து வின்னுலகம் செல்வது மூன்றாவது பிறப்பு. ஆக மரணமும் ஒரு பிறப்பே.

இரவில் பால் சாதம் ஆயுள் விருத்தி, இரவில் தயிர் சாதம் ஆயுள் குறையும்.