செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வாராஹி வழிபாட்டின் சிறப்புகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

அன்னை லலிதாம்பிகை, ஒவ்வொரு அரக்கனையும் கொல்ல ஒரு சக்தியை உருவாக்கினார். அந்த வகையில் விசுக்ரன் எனும் அசுரனை கொல்ல வாராகி எனும்  சக்தியை அன்னை லலிதாம்பிகை படைத்தாள். 

வாராகியின் சிறப்பு பற்றி லலிதா சகஸ்ரநாமத்தின் 78-வது சுலோகத்தில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றிபெற  வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும்.
 
ஜோதிடத்தில் இரவுக்கு அதிபதி சனி - கருப்பு இருட்டு, புதர், எல்லாம் சனி ஆதிக்கம் செய்யும் இடமாகும். நவகிரகங்களிலே இவர் ‘கர்மகாரகன்’ என்று  அழைக்கப்படுகிறான்.
 
நீதிமான் இவனே, செய்த தவறுக்கு பாரபச்சமின்றி தண்டனை வழங்குபவன். மக்கள் அலறி ஓடுவது எல்லாம் என்ற இவர் காலம் வரும்போது தான். இவர்  பார்வையில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் யாரும் தப்ப இயலாது. ஒருவனை கோட்டையிலிருந்து குடிசைக்கு கொண்டு வரும் பார்வை வலிமை  சனிபகவானுக்கு உரியது.
 
ஈசன் முதல் சகல தேவர்களையும் ஆட்டி வைத்த வரலாறு இவருக்கு உண்டு. இவர் கட்டுப்பட்டு நிற்கும் ஒரே கடவுள் வாராகி மட்டுமே. வாராகி பக்தனை ஒரு  போதும் சனிபகவான் நெறுங்குவதே கிடையாது. ஏனெனில் கரிய நிறம், எருமை, இதன் எல்லாம் சனி ஆதிக்கம், ஆகவே இவர் ‘ஆயுள்காரகன்” என்று அழைக்கப்படுகிறான். இதன் காரணத்தினாலே ஆயுள் முடிக்கும் இறைவன் எமதர்மன் எருமையை வாகனமாக வைத்துள்ளார். 
 
இந்த எருமையையே வாகனமாக கொண்டு அவதரித்தவள் இந்த வாராகி. தேவர் மூவர் யாவரும் அடிபணிந்து வணங்க தக்க தெய்வ வடிவானவள் இவளை  வணங்கும் யாரையும் சனி பகவான் நிச்சயம் தீண்டமாட்டார் என்பது முற்றிலும் உண்மை. எனவே இரவு நேர பூஜையில் வராகி தேவியை வழிபட்டு வாழ்வில் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.