1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சனி பகவானின் கெடுபலனிலிருந்து விடுபட உதவும் பரிகாரங்கள் !!

நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.

இந்தியாவில் திருநள்ளாறில் தனி ஆலயமாக சனீஸ்வரன் மிகப் பிரசித்தம் பெற்று விளங்குகின்றார். இலங்கையில் திருக்கோணமலையில் மரத்தடியில்  சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
 
சனிக்கிரகம் பூமியில் இருந்து 97 கோடியே 90 லட்சம் மைல்கள் தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றி 3 வளையங்கள் உள்ளன. இதன் நடுவில் இருள் படலம்  உள்ளது. 75000 மைல் விட்டமும் 700 பங்கு கன பரிமானம் உள்ளது. பூமியைப் போல் 100 மடங்கு எடையுள்ளது. இது ராசி மண்டலத்தைச் சுற்றிவர 29 வருடம்  ஆகிறது.
 
சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை சனிக்கிழமைகளில் விசேஷமாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து எள்ளு எரித்து சனிபகவானின் கெடுபலனிலிருந்து விடுபடுவதால் நற்பலனை பெறலாம்.
 
சனீஸ்வரரின் அருளை வேண்டி வழிபடுபவர்கள் அவசியம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வது நல்லது. சனிபகவான் தொல்லை நீங்க வேண்டுமானால் விபூதி அணிய வேண்டும்.
 
சனீஸ்வர தீபம்: முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
 
இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும்  மகிழ்ச்சியையும் அளிக்கும்.