ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

நற்பலன் மற்றும் தீய கனவுகளின் பலன்கள் சிலவற்றை பார்ப்போம்...!!

நற்பலன் தரும் கனவுகள்: திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும்.  திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
 
ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
 
இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
 
திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி  வந்த ஆபத்துகள் நீங்கி நன்மை பிறக்கும்.
 
கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும். நலம் அதிகரிக்கும்.
 
தீய பலன் தரும் கனவுகள்:
 
தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பம் பிரியும்.
 
எறும்புகள் கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
 
இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
 
பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால், உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
 
காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.
 
நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
 
நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
 
புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.