புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

பகவத் கீதை: இறைவன் திருவடியை அடைய...!

எப்படி வாழ வேண்டும்? குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும்? எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும்  பகவத் கீதை வழி காட்டுகிறது.
யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் கீதை புத்தக தானம் மிகுந்த புண்ணியம்  தரும்.
கீதாச்சாரம்:
 
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.