1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (14:47 IST)

உயிர் ஆற்றலான குண்டலினி சக்தியை பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது. சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். 
 
இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. 
 
மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம். முதலில் மூலாதாரம்: இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச்சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இச்சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம் தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படையான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது. 
 
இரண்டாவது சுவாதிஷ்டானம்: இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த்தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. 
 
மூன்றாவது மணிப்பூரகம்: இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதி பலிக்கிறது. 
 
நான்காவது அனாகதம்: இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படை ப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது.
 
ஐந்தாவது விசுக்தி: இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்து வது ஆகும்.
 
ஆறாவது ஆக்ஞை : இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்து ள்ளது. ஞானம், பேரறிவு ஆகிய வை வெளிப் படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான். 
 
இறுதியாக சஹஸ்ரஹாரம்: இது உச்சந் தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது.