வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:49 IST)

இஞ்சி டீ அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

இஞ்சியில் உள்ள சத்துக்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தில் கொழுப்பு சேர்வதைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்.

நீண்ட தூரம் பயணம் செய்யும் போது சிலருக்கு வாந்தி அல்லது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். இதனை தடுக்க இஞ்சி டீ அருந்துவது நல்லது. இஞ்சி டீ குடித்தால் உடனடியாக வாந்தி வருவதைத் தடுக்கலாம்.
 
தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும்  சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.
 
வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது.
 
சாப்பிடும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆவதற்கு இஞ்சி டீ பயன்படுகிறது. உணவு எளிதில் ஜீரணம் ஆவதால் பசியின்மை நீங்கி நல்ல பசி எடுக்கும்.
 
இஞ்சியில் உள்ள காரத்தன்மை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து புற்றுநோய் வரவிடாமல் பாதுகாக்கிறது.