புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 12 மே 2022 (10:45 IST)

புராணத்தில் கூறப்படும் ஏகாதசி விரதம் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Ekadashi
விஷ்ணு பகவான் மனிதர்கள் வாழும் காலத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய பாவங்களுக்கு தண்டனைகளை ஏற்படுத்தி, அதற்காக எமலோகத்தை சிருஷ்டித்து எமராஜனையும் அந்த லோகத்திற்கு நியமித்தார்.


எமலோகத்திற்கு ஒருநாள் விஷ்ணு விஜயம் செய்தபோது, அங்கு மனிதர்கள் படும் அவஸ்தையை கண்டு மனமிறங்கி ஏகாதசி விரதம் பற்றி அவர்களுக்கு கருணையுடன் எடுத்துரைத்தார். யார் இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்கள் பிறவிப்பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என உறுதியளித்தார்.

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.

ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம். தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து, அதற்கு மறுநாள் துவாதசி அன்று காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.