திங்கள், 16 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க செய்ய வேண்டியவை...!

வீட்டில் எப்போதும் பிரச்சனையாக இருப்பதற்கு காரணம் வீட்டின் வாஸ்துதோஷமாக இருக்கலாம். அதற்குரிய எளிய பரிகாரம் செய்து பலன் பெறுங்கள்.
பூஜைகளின் மூலம் வாஸ்து தோஷங்களை நீக்கலாம். அதற்காகப் பெரிய சிரமங்கள் எதுவும் படத்தேவையில்லை. வீட்டில் தினமும் ஊதுவர்த்தி காட்டி சாமி  படங்களுக்கு பூஜை செய்து வந்தாலே போதும். வீட்டில் எந்த கெட்ட சக்தியும் அண்டாது.
 
தினமும் காலையில் கிழக்கு நோக்கி தீபமேற்றி, ‘ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை ஜபியுங்கள். செவ்வாய், வெள்ளிக் கிழமை மாலையில் வீடு முழுவதும் சாம்பிராணி புகை கூழ, ஓம் என்னும் பிரணவ மந்திரம், கந்தசஷ்டிக் கவசம், சிவபுராணம், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு  சகஸ்ரநாமம், காயத்ரி மந்திரம் போன்ற ஸ்லோகங்கள் ஒலிப்பது நல்லது. வீட்டின் வடகிழக்கில் துளசி, நந்தியாவட்டை போன்ற பூச்செடிகல் வளர்க்கலாம். 

ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் நடத்தினால் நல்லது. வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றலாம்.
 
தினமும் மாலை நேரங்களில் கட்டாயமாக வீடுகளில் விளக்கேற்றி வைக்க வேண்டும். குறிப்பாக, தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்துக்கு அருகே விளக்கேற்றி  வைத்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும்.