1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கடன் தொல்லையிலிருந்து விடுபட எளிய பரிகாரங்கள்.....!

கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர்கள், விரைவில் தங்களது அனைத்து கடன்களும் அடைவதற்கான வழியை பிறக்க செய்யும் மிக மிக எளிய பரிகாரம்  ஒன்று உள்ளது.
கடன் மட்டுமின்றி அனைத்து பிரச்சனைகளும் தீர நமது வீட்டில் துர் சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் குடிகொள்ள வேண்டும். நல்ல சக்திகளை குடிகொள்ளச் செய்ய நாம் சில எளிய முறைகளை கடைபிடித்தாலே போதும், தினமும் காலையில் ஆறு மணிக்கு முன்பாக எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உங்கள்  இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு ஒரு நெய் தீபம் ஏற்றுங்கள். அதன் பிறகு உங்கள் குலதெய்வத்திடமும் உங்கள் இஷ்ட தெய்வத்திடமும் மனமுருகி  வேண்டுங்கள்.
 
அதேபோல் மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபடுங்கள். வீட்டில் தீபம் ஏற்றும் சமயத்தில் யாரும் தூங்கிக்கொண்டிருக்க கூடாது. 
தீப வழிபாடு செய்வதோடு, சிலவற்றை கடைபிடிப்பது அவசியமாகிறது. தேவை இல்லாமல் தண்ணீரை செலவு செய்யக்கூடாது. வீட்டு குழாயில் தண்ணீர் சிந்தாமல் மூடிவைக்க வேண்டும்.
 
வீட்டில் அதிக அளவு உணவை சமைத்து வீண் செய்ய கூடாது. அதை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நல்ல விதமான  ஆற்றல் இயங்க துவங்கும். கடனும் விரைவில் குறைவதை காணலாம்.