செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூரில் சித்திரை மாத அமாவாசையையொட்டி சாஞ்சக்கல் கருப்பண்ணசுவாமி ஆலயத்தில் விஷேச வழிபாடு

கரூரில் சித்திரை மாத அமாவாசையையொட்டி, பஞ்சமுகி விநாயகர் ஆலயம் மற்றும் சாஞ்சக்கல் கருப்பண்ணசுவாமி ஆலயத்தில் விஷேச வழிபாட்டில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சித்திரை மாத பெளர்ணமி விஷேசம் என்றால் சித்திரை மாதம் அமாவாசையும் மிகவும் விஷேசமாகும், இந்நிலையில் அம்மனுக்கும், கருப்பண்ணசாமி ஆலயத்திலும் பக்தர்கள் கூட்டம் குவியும், கரூர் வெங்கமேடு பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சாஞ்சக்கல்
கருப்பண்ணசாமி ஆலயத்திலும், பஞ்சமுகி விநாயகர் ஆலயத்திலும், கருப்பண்ணசாமிக்கும், விநாயகருக்கும், விஷேச அரிவாள்களுக்கும், குதிரைக்கும் சிறப்பு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, அருள்மிகு ஸ்ரீ சாஞ்சக்கல் கருப்பண்ணசாமி அருளும், பஞ்சமுகி விநாயகர்  அருளும் பெற்றனர்.