திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 மே 2019 (14:31 IST)

வாக்கு எந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி சொதப்பல் – ஜோதிமணி புகார் !

தேர்தல் முடிந்து வாக்குப்பெட்டிகள் வைத்துள்ள அறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை எனக் கரூர் வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களுக்கு ராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அந்த அறைகளில் 24 மணி நேரமும் சிசிடிவிக் கேமராக்கள் கண்காணிப்புப் பணியில் உள்ளன. மேலும் வேட்பாளர்களின் முகவர்களும் பாதுகாப்புக்காக அங்கு இருந்து வருகின்றனர்.

கரூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் உரிய பாதுகாப்பு செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் இப்போது அங்கே உள்ள சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை என முகவர்கள் மூலம் தெரிந்து கொண்ட ஜோதிமணி இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

சிசிடிவி கேமராவில் உள்ள நேரங்கள் மாறி மாறி வருவதாகவும் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் சிசிடிவி வேலை செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை அடுத்து இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.