Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் செய்து வழிபடலாம்....?

Written By Sasikala
Updated: புதன், 2 டிசம்பர் 2020 (14:00 IST)

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார். சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர  பேறு கிடைக்கும்.
 
சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும். வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து  வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
 
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார். குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.
 
புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். வளம் தருவார்.
 
வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
 
பசுஞ்சாண விநாயகர் - நோய்களை நீக்குவார். கல் விநாயகர் - வெற்றி தருவார்.
 
புற்றுமண் விநாயகர் - வியாபாரத்தை பெருக வைப்பார். மண் விநாயகர் - உயர் பதவிகள் கொடுப்பார்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments