1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Worship of Goddess Durga and its benefits !!

துர்கா தேவியின் வழிபாடும் அதன் பலன்களும் !!

துர்கா தேவி
அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.

துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை.
 
பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்காதேவி.
 
கோர்ட்டு விவகாரங்கள் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் பந்த நிவாரணமும் சித்திக்கும்.
 
மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் துர்க்கா மாதாவின் திருவடி நிழலைப்  பிரார்த்திக்க வேண்டும்.
 
பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்காதேவி. துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும். ஸ்ரீ துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி மயில்தோகை.
 
ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான். ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி அவன் கைவசமாகும்.
 
துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது. மந்திர சாஸ்திரம். 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோஹிணி, 5. காளிகா, 6.  சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (02-12-2020)!