புதன், 13 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அஷ்டமி நவமி நாட்களில் சுபகாரியத்தை செய்யாமல் தவிர்ப்பது ஏன்...?

பொதுவாக இந்த இரு திதிகளிலும் நல்ல காரியங்கள் செய்வதை புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகாவிஷ்ணுவிடம் சென்று தங்களின் கவலையை கூறினார்கள். 
அப்போது விஷ்ணு பகவான், உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும் என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக  கொண்டாடப்படுகிறது.
 
நவமி திதியில் தசரதர்-கௌசலை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராமநவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும்.

நவமி திதியில் தான் ஸ்ரீராமர் அவதரித்தார்.  அவர் அரியணை ஏற்கும் நேரத்தில் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட  துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்தது தான் காரணம். எனவே, நவமி திதியில் நல்ல காரியங்கள் தொடங்கப்படுவதில்லை.  ஆனால், தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும்.
 
பொதுவாக, அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி  ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும். 
 
நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் நமக்கு வெற்றி நிச்சயம். மேலும்,  இந்தத் திதியில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கி வேலையில் ஈடுபட்டால், அனைத்துக் காரியமும் சுபமாக நடைபெறும்.