புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கோவிலுக்கு செல்லும்போது அசைவ உணவை தவிர்ப்பது ஏன்...?

பொதுவாக நாம் கோயிலிக்கு செல்லவேண்டும் என்றால் காலையில் குளித்துவிட்டு பின் செல்வோம். நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம்  அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம்.
 
அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும். கோயிலுக்குச்  செல்லும் போது சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்துதான் குறிக்கிறது. மனதின் தன்மை தான் நாம்  எப்படி இருக்கிறோம் என்று சொல்லும். அதாவது கோவமாகவா. துக்கமாகவா என்று குறிக்கும்.
 
மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும்போது அந்த சக்திகளை உணரக் கூடிய  ஆற்றலை இழந்து விடுகிறார். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டவை.  எனவே தான், கோயிலுக்கு செல்லும்போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்க  செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள் 
 
ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு செல்வது நல்லது. பெரும்பாலும் நாம் அசைவம் சாப்பிட்டு பிறகு கோயிலுக்குச் செல்லாமல் தவிர்பது நன்மை தரும்.