1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எந்த பௌர்ணமியில் விளக்கேற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...?

தினமும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாகவும், மாலை 6 மணியிலும் விளக்கேற்றுவதால் பல நன்மைகள் கிடைக்கும். 


ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விரதமிருந்து விளக்கேற்றுவதால் மேலும் நற்பலன்கள் கிடைக்கும். எந்தெந்த பௌர்ணமியில் விளக்கேற்றினால் என்ன பலன் கிடைக்குமென  பார்க்கலாம். 
 
சித்திரை மாத பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்.
 
வைகாசி மாத பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றினால் மணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.
 
ஆனி மாத பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
 
ஆடி மாத பௌர்ணமியன்று விரமிருந்து விளக்கேற்றினால் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழலாம்.
 
ஆவணி மாத பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றினால் வீட்டில் செல்வம் பெருகும்.
 
புரட்டாசி மாத பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
 
ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றினால் தானியம் பெருகி, குடும்பத்தாரின் பசிப் பிணிகள் நீங்கும்.
 
கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால் புகழ் கிடைக்கும்.
 
மார்கழி மாதப் பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்.
 
தை மாத பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் அனைத்து நன்மையும் கிடைக்கும்.
 
மாசி மாத பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றினால் துன்பங்கள் விலகி இன்பம் கிடைக்கும்.
 
பங்குனி மாத பௌர்ணமியன்று விரதமிருந்து விளக்கேற்றினால் தர்மம் செய்த பலன் கிட்டும்.
 
பௌர்ணமியன்று குளித்து, வீட்டை சுத்தம் செய்து, சுவாமி படங்களை பூக்கள் அணுவித்து, காலை ஆறு மணிக்குள் தலைவாசலில் அகல்விளக்கேற்றி, பிறகு பூஜையறையில் விளக்கேற்றி. மீண்டும் மாலை ஆறு மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அன்றையதினம் அசைவ உணவினை தவிர்க்க வேண்டும்.