1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா....?

குறைந்தபட்சம் 200 கிராம் அளவிற்காவது ஒரு வாரத்தில் மீனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடல் உறுப்புகள் அனைத்திலும் நல்ல தாக்கத்தை  ஏற்படுத்துமாம்.

வாரத்திற்கு 2 முறை நீங்கள் மீன் சாப்பிடுவதால் நமது உடலில் இருக்க கூடிய உறுப்புகள் பல சீரான முறையில் வேலை செய்யுமாம். அத்துடன் இவற்றின் ஆயுட் காலமும் நீடிக்கப்படும். மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளும் குறைய தொடங்கும்.
 
வாரத்திற்கு 2 முறை உணவில் மீன் சேர்த்து கொள்வோருக்கு ஆயுள் கூடுமாம். அத்துடன் உடலின் ரத்த ஓட்டம் சீராக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
 
மீன் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்க கூடும். குறிப்பாக வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்க கூடும். எப்போதும் சோர்வாகவே இருக்கும் பலருக்கு இந்த மீன் வைத்தியம் கண்டிப்பாக உதவும்.
 
ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தையும் பாதிப்பையும் தடுக்க கூடிய ஆற்றல் இந்த மீனிற்கு உள்ளது. வாரத்திற்கு 2 முறை சாப்பிடுவதால் இதிலுள்ள ஒமேகா 3  கொழுப்பு அமிலங்கள் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். மேலும், மூட்டுகளுக்கும் நல்ல பலத்தையும் தரும்.
 
நாம் சாப்பிட கூடிய மீன்களை வறுத்தோ, டீப் ப்ரை செய்தோ சாப்பிட்டால் பலவித பாதிப்புகள் நமக்கு ஏற்படும். இதனால் மீனில் இருந்து கிடைக்க கூடிய பயன்கள்  தலைகீழாக மாறி தீமையை கொடுக்க ஆரம்பிக்கும். எனவே, வறுக்காத மீன்களை சாப்பிட்டால் இதன் பயன் அப்படியே கிடைக்கும்.
 
உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு தீர்வை தர மீன் உள்ளது. மேலும், உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைத்து சமமான அளவில் ரத்த அழுத்தத்தை வைத்து கொள்ளும். இப்படி பலவித நன்மைகள் மீனில் இருப்பதற்கு முக்கிய காரணம் இதில் அதிகம் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தான். மனித உடலுக்கு இந்த  ஒமேகா 3 அதிகம் தேவைப்படுகிறது.