1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அமாவாசை நாளில் வீட்டில் இருந்து எவ்வாறு பூஜை முறைகளை பின்பற்றுவது...?

திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை 'மகாளய அமாவாசை" என்று சிறப்பித்து கூறுவார்கள்.

மகாளய அமாவாசை தினத்தில் புண்ணிய தலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி எள், தண்ணீர் ஆகியவற்றை இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்கள் வழிபாட்டில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
இறந்து போன முன்னோர்களை எண்ணி அவர்களுக்கு பிடித்த பொருட்களை வைத்து படைத்து காகத்திற்கு வைத்த பின்பு உறவினர்கள் அல்லாதவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவுகளை பரிமாறவும்.
 
வேதமறிந்த அந்தணர்களை வீட்டிற்கு அழைத்து முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண காரியங்களை செய்து பின்பு பிண்டங்களை கொண்டு சென்று அருகில் இருக்கும் ஆற்றில் அல்லது நீர்நிலையங்களில் கரைக்கவும்.
 
முன்னோர்களை எண்ணி அவர்களின் பெயர்களில் வயதானவர்கள், உடல் நலிவுற்றோர்களுக்கு தேவையான பொருட்களை தானமாக கொடுப்பதும், உதவுவதும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும். அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் மேன்மையை உருவாக்கும்.