புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கையில் கட்டிக்கொள்ளும் கயிறுகளை எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்...?

நாம் கையில் கட்டும் ஒவ்வொரு வகை கயிறுக்கும் எவ்வேறு பலன்கள் உள்ளன. மேலும் கயிறு கட்டுவதால் எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும் என அறிவியல் ரீதியாக கூறப்படுகின்றது.

காசி, திருப்பதி, நல்லூர் போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி பயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி  கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறு கையில் கட்டப்படுகிறது.
 
இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ளவேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்டவேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போடு விடவேண்டும். யார் காலிலும் படும்படி  போடக்கூடாது.
 
பட்டு நூலினாலான காப்பு கயிறு: குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம். நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து  நம்மை காக்கும்.
 
சிவப்பு நிறத்தில் கயிறு: நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம். இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.
 
ஆரஞ்சு நிறக்கயிறு: இந்த கயிறினை மணிக்கட்டில் கட்டுவதால் புகழ், அதிகாரம் சேரும். இத்தகைய காப்பு கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது  கையிலும் அணிவது சிறப்பு.
 
காவி நிறக்கயிறு: இந்த வகை கயிறு முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவார்கள். இதுவும் ஒரு வகையில் தீய சக்திகளிடமிருந்து நம்மை காப்பதே ஆகும்.