1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Reducing the harm caused by the planets; Bath remedies!!

கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைக்கும் குளியல் பரிகாரங்கள்!!

கிரகங்கள்
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெறலாம்.


மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
 
சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.
 
சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்த்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.
 
செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.
 
புதன் : மஞ்சள் கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.
 
வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
 
சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
 
சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
 
ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
 
கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சதுர்த்தி பூஜையை செய்வதால் உண்டாகும் பலன்கள்....!!