திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (09:48 IST)

பதவிக்காக யாகம் நடத்தினாரா பொன்.ராதாகிருஷ்ணன்?

கன்னியாகுமரி தொகுதி எம்பி, மத்திய இணை அமைச்சர் என கடந்த ஐந்து ஆண்டுகளாக வலம் வந்த பொன் ராதாகிருஷ்ணன், கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததால் எந்த பதவியும் இல்லாமல் தற்போது உள்ளார்.

எனவே காலியாக இருக்கும் தமிழக பாஜக தலைவர் பதவியையாவது பிடிக்க வேண்டும் என அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் அருகே அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் யாகம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே கோவிலில் அமித்ஷாவுக்காக யாகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் தான் அவர் பாஜகவின் தேசிய தலைவராகவும், உள்துறை அமைச்சராகவும் ஆகியுள்ளார். இதே பாணியில் இந்த கோவிலில் தானும் யாகம் செய்தால் தனக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்கும் என பொன் ராதாகிருஷ்ணன் நம்புவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,