1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. February 2025 monthly Astrology and horoscope prediction Thanusu

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – தனுசு!

Dhanusu
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:


தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் சுக்கி, ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

05.02.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.02.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
12.02.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் 
26.02.2025 அன்று ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

தனுசு ராசியினரே இந்த மாதம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும்.  கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.
உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். அலுவலகப் பயணங்களால் நன்மை உண்டாகும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு கிடைக்கும். ஆனால் உடலில் சிறிது சோர்வு ஏற்படும் என்பதால் சுறுசுறுப்பு குறையும்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நஷ்டம் குறைந்து வருமானம் வரத் தொடங்கும். புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். தொடர்ந்து வந்த போட்டிகள் நீங்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகளைச் செய்யலாம். கொடுக்கல், வாங்கலில் நலம் தரும் திருப்பங்கள் ஏற்படும்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும், செயலாற்றும் திறமையும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். கட்சித் தலைமையுடன் இணக்கமாக இருப்பீர்கள். வழக்குகளில் முடிவைக் காண்பீர்கள். சமூகத்தில் புதிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு சிறிய தடைகளுக்குப் பிறகு சிறப்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் நன்றாகவே இருக்கும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். உங்களின் கடமையை சரியாக நிறைவேற்றுவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

பெண்மணிகளுக்கு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவருடன் ஒற்றுமையாக நடந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.

மாணவமணிகள் நன்றாகப் படித்து தேர்வுக்கு தயாராவீர்கள். பழைய தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். மற்றபடி உழைப்புக்கேற்ற மதிப்பெண்கள் கிடைக்கும்.

மூலம்:

இந்த மாதம் குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  பணம் வந்து சேரும்.  உங்கள் திறமை வெளிப்படும். பொருளாதாரம் சம்பந்தாமாக தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

பூராடம்:

இந்த மாதம் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.  குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

உத்திராடம்:

இந்த மாதம் மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் எழுந்தருயிருக்கும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடவும். அவருடைய அருளால் அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள் : 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!