1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. February 2025 monthly Astrology and horoscope prediction Midhunam

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மிதுனம்!

Mithunam
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்(வ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் சுக்கி, ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

05.02.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.02.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
12.02.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சூரியன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2025 அன்று ராசியில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் 
26.02.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

மிதுன ராசியினரே இந்த மாதம் வீண் மனக்கவலை ஏற்படலாம். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு வியாஜ்ஜியங்களில் நிலுவைகள் தொய்வு ஏற்படலாம். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் நல்ல முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுவீர்கள். அலுவலகத்தில் இருந்த பழைய சட்டப் பிரச்னைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு வருமானம் நல்ல முறையில் வந்தாலும் போட்டிகளைச் சந்திப்பீர்கள். எனவே பொறுப்புடன் நடந்துகொள்ளவும். நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். விரைவாக விற்கும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விற்பனை செய்யவும். மற்றபடி செயல்படும் முறையை திருத்திக்கொண்டு பணியாற்றுவீர்கள்.

வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு ஏற்ற காலமிது. தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறனால் மாற்றுக் கட்சியினரையும் கவர்வீர்கள். தொண்டர்கள் உங்களுக்குக் கீழ் படிவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவால் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். அனைவரையும் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை ஏற்பீர்கள். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சக கலைஞர்களுடன் விரோதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். பெண்மணிகளுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுவீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார், உறவினர்களிடம் ரகசியங்களைப் பேச வேண்டாம்.

மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து படித்து வைத்துக்கொள்ளவும். உங்கள் கனவுகள் பலிக்கும். மற்றபடி விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

ம்ருகசீரிஷம்:

இந்த மாதம் தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள்.

திருவாதிரை:

இந்த மாதம் திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

புனர்பூசம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்.

பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
அடுத்த கட்டுரையில்
பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!