1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. February 2025 monthly Astrology and horoscope prediction kanni

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

Kanni
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசியில் கேது - பஞசம ஸ்தானத்தில் சூரியன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் சுக்கி, ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

05.02.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.02.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
12.02.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் 
26.02.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கன்னி ராசியினரே இந்த மாதம் பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள்  அனுகூலமாக நடந்து முடியும்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் தான் உண்டு தன் வேலையுண்டு என்கிற ரீதியில் பணியாற்றி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் ஒதுங்கி இருங்கள். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது. மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

தொழில்துறையாளர்களுக்கு காலகட்டம் முழுக்கவே பணி இருக்கும். வேலையாட்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

அரசியல்வாதிகள் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மற்றபடி தொண்டர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். பேச்சாற்றல் அதிகரிக்கும். துறையில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.

பெண்மணிகள் தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும்.

மாணவமணிகள் படிப்பில் முன்னேறுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு அமோகமாக அமையும்.

உத்திரம்:

இந்த மாதம் உங்களுக்கு பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவ தாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறைந்து காணப்படும். 

சித்திரை:

இந்த மாதம் மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.  

பரிகாரம்: புதன்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று வரவும். அவளின் அருட்கண்பார்வையால் எல்லாக் காரியங்களும்  தங்கு தடையின்றி நடைபெறும்.
சந்திராஷ்டம தினங்கள் : 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – துலாம்!