1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. February 2025 monthly Astrology and horoscope prediction Rishabam

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – ரிஷபம்!

Rishabam
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் குரு (வ) - தனவாக்கு ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - பஞசம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் சுக்கி, ராஹூ என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

05.02.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.02.2025 அன்று ராசியில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
12.02.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் 
26.02.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

ரிஷப ராசியினரே இந்த மாதம் திடீர் டென்ஷன் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக  வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். புதிய பணியில் சேர்ந்தவர்களுக்கு அமைதியான முறையில் மனச்சஞ்சலங்கள் விலகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும் காலமிது. எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். புதிய கடனுக்கான முயற்சிகளை முடித்துக் கொள்ளுதல் நன்மை பயக்கும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். நண்பர்கள் உண்மையான நட்புடன் பழகுவார்கள். அவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சந்தைகளை நாடி பொருட்களை விற்பனை செய்வீர்கள். அரசு வழியிலும் சில நன்மைகள் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன்மூலம் புகழும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். துறையில் பிரபலமானவர்களை சந்திப்பீர்கள். சமுதாயப் பணி செய்து உங்களின் பெயரை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் கணவரின் அன்பால் அவற்றிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோர்ட் விஷயங்களில் சுமூகமான முடிவுகள் வந்து சேரும். சிலருக்கு வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான வாய்ப்புகளை ஏற்படும்.      

மாணவமணிகள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதனால் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். மற்றபடி உடல் ஆரோக்யத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

க்ருத்திகை:

இந்த மாதம் புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில்  ஈடுபடுவது நன்மையை தரும்.

ரோகினி:

இந்த மாதம் குடும்பத்தில் சுமூகமான நிலை காணப் படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

ம்ருகசீரிஷம்:

இந்த மாதம் வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குரு பார்வையால் தேவையான பணவரத்தும் இருக்கும்.

பரிகாரம்: சிவன் கோவிலை வலம் வாருங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.
சந்திராஷ்டம தினங்கள் : 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!