பிரியாணி செய்ய பயன்படுத்தப்படும் இந்த இலையில் இத்தனை அற்புத சக்திகள் உள்ளதா...?

Biryani leaf
Sasikala|
நாம் உணவிற்காக பயன்படுத்தும் பிரியாணி இலை அல்லது பிரிஞ்சி இலை பல உன்னதமான ஆற்றல்களை கொண்டதாகும். இந்த இலை சூரியனின் தன்மையை  அதிகமாக கிரகிக்க கூடியது. சூரியன் என்பவன் மனிதனுக்கு ஆத்ம காரகனாக கருதப்படுகிறார்.

இந்த இலையை நாம் அதிகம் பயன்படுத்தினால் ஆன்ம பலம் அதாவது எதையும் எதிர்த்து முன்னேறும் மன உறுதி வாய்க்கப்பெறும், கிரேக்க கடவுளான அப்போலோ ஒரு சூரிய கடவுள் என்பதும் எதிர்ப்புகளை தகர்கிற தன்மையுடைவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
இந்த இலையை உறங்கும் போது தலையணைக்கு கீழ் வைத்து தூங்கினால் நல்ல உறக்கமும் காலையில் எழும்போது தெளிவான மனநிலையும் வரும்.  இந்த இலையானது மூன்றாவது கண் மற்றும் மணிப்பூரக சக்கரதோடு தொடர்பு உடையது. எனவே இந்த இலையை கையில் வைத்துக்கொண்டு நாம் எதாவது  சங்கல்பம் செய்தால் அது நிச்சயம் நடந்துவிடும். 
 
இந்த இலையை எரிப்பதால் வரும் புகை உடல் மற்றும் மன நலத்திற்கு மிக ஏற்றது. வீட்டில் இந்த புகை தீய சக்திகளையும் எதிர்மறை சக்திகளையும் விரட்டி  விடும். நம்மிடம் உள்ள மாற்ற முடியாத பழக்கவழக்கங்கள், தீய குணங்கள் போன்றவை மாற வேண்டும் என்றால், இந்த இலையில் அந்த குணங்களை பேனாவால்  எழுதி அதை ஒரு தீபத்தில் எரித்தால், நாளடைவில் அந்த குணங்களில் இருந்து நாம் விடுபடுவதை நாம் உணரலாம்.
 
மேலும் நாம் விரும்புகிற செயல்கள் விரைவில் நடக்க வேண்டும் என்றால் கூட அந்த செயலை இந்த இலையில் தெளிவாக எழுதி 21 நாட்கள் நெய் விளக்கில் எரித்து அதன் புகையை நுகர்ந்து அதன் சாம்பலை நம்முடன் வைத்துக்கொண்டால் அந்த அந்த செயல் நிச்சயமாக நடக்கும். இந்த இலையை பொடி செய்து  தண்ணீர் மற்றும் பன்னீரில் கலந்து வீடு முழுவதும் தெளிப்பது லஷ்மி கடாக்‌ஷத்தை ஏற்படுத்தும். 


இதில் மேலும் படிக்கவும் :