செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் எந்தெந்த தெய்வ படங்களை வைத்து வணங்குவது சிறந்தது....?

லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.

ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின்  படத்தை வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.
 
ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். பொதுவாக வீட்டில் அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். 
 
லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். மணக்கோலத்தில் இருக்கும் முருகரின்  படத்தினை வைத்து வணங்கி வரலாம். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும்.
 
எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். குழந்தை  கடவுள் படம் எதுவாக இருந்தாலும் அதை வைத்து வணங்கி வரலாம்.
 
அன்னப்பூரணியின் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. 
 
அர்த்தநாரீஸ்வரரின் படத்தை வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.
 
குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படத்தை வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. மூன்று தேவியரின் படமும் வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.