செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வரலட்சுமி விரதத்தின் புராணக்கதை பற்றி தெரியுமா...?

செளராஸ்டிரா தேசத்தை சேர்ந்த பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணு வின் சிறந்த பக்தனாக திகழ்ந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா மாகாராணியாக இருந்தார். பணத்தில் திழைத்ததால் பொன், பொருளை மதிக்காமல் இருந்தார்.

அவருக்கு சியாமபாலா என்ற ஒரு மகள் இருந்தார். தாய், தந்தையரால் மிக சிறப்பாக வளர்க்கப் பட்டு, நல்ல குடும்பத்தில் மணமுடித்து கொடுக்கப்பட்டாள்.
 
ஒரு சமயம் மகாலட்சுமி தாயார், வயதான சுமங்கலி வேடம் தரித்து, சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி கூறினார். மணம் முடித்த மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள்.
 
அப்படி விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, சுரசந்திரிகா மாகாராணியின் மகள் சியாமபாலா சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். பக்தியுடன் விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள்.
 
ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத் திய அவளது பெற்றோர், வறுமையில் வாடத் தொடங்கினர். இதனை அறிந்த மகள் சியாமபாலா ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அவர்கள் செய்த தீவினையால் அது கரியாகி விட்டது.
 
இதையடுத்து சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி சொல்லி பூஜை செய்யும்படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன் பிறகு இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தது.
 
இதனால் மகாலட்சுமியே சியாமபாலாவைப் பார்த்து வியந்து போனார். மேலும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கும் வீட்டில் நான் பூரணமாக, நிலையாக தங்குவேன்.என் அருள் பூரணமாக கிடைக்கும் என கூறியுள்ளார்.
 
இந்த விரதத்தை கடைப்பிடித்தாலும், விரத முறையை மற்றவருக்கு சொன்னாலும் புண்ணியம் கிடைக்கும் என்றார். அப்படி அம்பிகையே கூறிய விரதம் என்பதால், அது எவ்வளவு பெரிய சிறந்த விரதமாக இருக்கும் என உணர வேண்டும். மற்ற விரதத்தை விட மிகச்சிறந்த விரதமாக பார்க்கப்படுவதால் கட்டாயம் கடைப்பிடிப்பது நல்லது.