1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By BALA
Last Modified: சனி, 7 பிப்ரவரி 2026 (12:15 IST)

பர்வதமலையில் ஏறுபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!.. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!..

parvathamalai
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்துள்ள தென்மகாதேவ் மங்கலம் என்கிற பகுதியில் பர்வதமலை அமைந்திருக்கிறது. இந்த மலை சுமார் 4560 அடி உயரம் கொண்டது. இந்த மலை உச்சியில் சிவன் கோயில் அமைந்திருக்கிறது.

மலையேற விரும்புவர்களும், ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களும் இந்த மலையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இங்கு வருகிறார்கள்.. அப்போது சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

கடந்த சில மாதங்களாகவே அங்கு பல அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 19 பேர் கொண்ட குழு பர்வதமலைக்கு சென்றிருந்தபோது திடீரென மலை வெள்ளம் ஏற்பட்டு அதில் இரண்டு பேர் சிக்கி அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். அதேபோல் பருவதமலையில் ஏறிய கல்லூரி மாணவர் ஒருவர் மூச்சு திணறி உயிரிழந்தார்..

இந்நிலையில்தான் பர்வதமலை ஏறுவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை திருவண்ணாமலை மாவட்டம் அறிவித்திருக்கிறது.

காலை 5 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே பக்தர்களுக்கும் மலையேற அனுமதி..

ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே மலையற அனுமதிக்கப்படுவார்கள்..

18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி..

நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 200 பேருக்கு மலையேற அனுமதி கொடுக்கப்படும்..

இதர மாவட்டங்களை சேர்ந்த 800 பேர் ஆன்லைனில் விண்ணப்பத்து அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது..