வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பர்சின் நிறத்தை மாற்றுவதால் அதிர்ஷ்டம் கிடைக்குமா...?

ஒவ்வொருவரும் அதிர்ஷ்டத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் எதிர்பார்த்துக் கொண்டுதான் பயணித்து கொண்டிருக்கின்றனர். உங்களுடைய மணிபர்சில் எந்தெந்த பொருட்களை வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
முதலில் நீங்கள் உபயோகப்படுத்தும் பர்ஸ் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அதில் கருமை நிறம் இல்லாதவாறு  பார்த்துக்கொள்ள வேண்டும். கருமை நிற பர்ஸ்களை உபயோகிக்க வேண்டாம் அது அதிர்ஷ்டத்தை தராது. தெய்வ உருவ படங்களில்  அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய லட்சுமிதேவி அல்லது குபேரன் படங்களை திறந்தவுடன் தெரியுமாறு வைத்துக் கொள்ளலாம்.
 
குபேர எந்திரத்தில் குறிப்பிட்ட எண்கள் இருக்கும் அதனை பரிசில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டத்தை வரவழைக்க முடியும். கிராம்பு, சோம்பு,  பட்டை, ஏலம், பச்சை கற்பூரம் இவை ஐந்தும் கலந்த ஒரு சிறிய மூட்டையை பர்சில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டத்தை வரவழைக்க முடியும். மேலும் கோமதி சக்கரம் மற்றும் சோலி இவைகளை பரிசில் வைப்பதன் மூலமும் பணத்தை ஈர்க்க முடியும். சிறிய அளவில் ஒற்றைப்படை  எண்ணிக்கையில் இருப்பது நல்லது. 
 
உங்களுடைய மணி பர்சை பின் பாக்கெட்டில் வைப்பதை தவிர்த்து பாருங்கள். மேலும் எந்த விதமான சிறிய ஆயுதம் சார்ந்த பொருட்களை வைக்க கூடாது. அரச இலையை பர்சில் வைத்தால் குறிக்கோள் வெற்றியடையும். நினைத்த செயல் வெற்றிகரமாக நிறைவேறும். மயில் இறகு  வைத்து கொள்ளலாம் அதன் மூலம் மென்மையான மற்றும் அமைதியான மன நிலையில் இருக்க முடியும். 
 
தொலைபேசி எண்களை குறிக்க அல்லது சிறிய காலண்டர் போன்றவற்றை பர்சில் வைத்து கொள்ளும் பழக்கம் இருந்தால் அவை பச்சை  நிறத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். பச்சை நிறத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும் போதும் நல்ல காரியத்திற்காக செலவிடுவது நல்லது. இவை தெய்வ கடாட்சத்தை பரப்பி அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் வழியாகும்.