வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

12 ராசியினரும் வழிபடவேண்டிய கணபதி ரூபங்கள்..!!

மேஷம்: மனோதைரியம் மிக்கவர். நீங்கள் செவ்வாயின் ஆதிகத்தை பெர்ற நீங்கள் வீரம் மிக்கவர்கள் எவருக்கும் அஞ்சாதவர்கள். நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.
ரிஷபம்: நீங்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்று அமபிகையின் பரிபூரண அருளுக்கு பாத்திரமானவர்கள். நீங்கள் வழிபட வேண்டியர் ராஜ ராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி.
 
மிதுனம்: பல்வேறு திறமையை உடைய உங்களின் திறமைக்கும் வளர்ச்சிக்கும் மறைமுகமாக வந்து சேர்கின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் லட்சுமி கணபதி.
 
கடகம்: நீங்கள் ஒரு நேரம் சாந்தம் ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டுபவர். நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.
 
சிம்மம்: இயற்கையில் தைரிய குணமிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித் திருமகள் துணை நிற்பாள். அசாத்தியமான மனவலிமையுடன்  என்றென்றும் வெற்றியினை ருசித்து வரும் நீங்கள் வழிபட வேண்டியர் விஜய கணபதி.
 
கன்னி:  மென்மையான குணத்தினை உடையவர் நீங்கள். உங்களின் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரிய மோகன கணபதி.
 
துலாம்: அயராத உழைப்பினை உடைய நீங்கள், மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓயமாட்டீர்கள். உங்களின் வழிபாட்டிற்கு  உரியவர் வெற்றி கணபதி.
 
விருச்சிகம்: மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது. சதா பணியாற்றிக் கொண்டிருப்பாவர்கள். எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியர் சக்தி கணபதி.
 
தனுசு: குருபகவானின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். தர்மநெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.
 
மகரம்: தியாக உள்ளம் கொண்டவர் நீங்கள். உங்கள் மனதினை அடக்கியான கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம் நீங்கள் வழிபட  வேண்டியர் யோக கணபதி.
 
கும்பம்: புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொள்ளும் தனித்திறமை பெற்றவர் நீங்கள். அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கியாள நினைப்பீர்கள். நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.
 
மீனம்: கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையர்வகள் நீங்கள். தான் நினைத்ததை அடைந்துவிடவேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.