ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சகல செல்வங்களையும் பெற்று தரும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு !!

புரட்டாசி சனிக்கிழமை அன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு வீட்டினை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பூஜை அறையை சுத்தம் செய்யவும். பூஜை அறையில் இருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் பூ போட்டு அலங்காரம் செய்யவும்.

பெருமாள் உருவ படம் அல்லது விக்ரஹம் இருந்தால் பெருமாளுக்கு பிடித்தமான துளசியால் பெருமாளை அலங்காரம் செய்யவும். பெருமாள் வழிபாட்டில் மிக முக்கியமான ஒன்று மாவிளக்கு போடுவது. புரட்டாசி சனிக்கிழமை அன்று இரண்டு மாவிளக்கு ஏற்றி பெருமாளை வழிபட வேண்டும். வீட்டில் இருக்கும் மற்ற தீபங்களையும் ஏற்ற வேண்டும்.
 
பின் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக 5 விதாமான சாதம், 5 விதமான பதார்த்தங்கள், பெருமாளுக்கு பிடித்த அக்காரவடிசல், உளுந்து வடை, பாயாசம், தயிர், சுண்டல், பழங்கள் போன்றவை இடம் பெற வேண்டும்.
 
முக்கியமாக பானகம், துளசி தீர்த்தம் வைக்க வேண்டும். பெருமாளை வழிபட்ட பின் முதலில் நாம் துளசி தீர்த்தத்தை சாப்பிட்டு தான் நம் விரதத்தை முடிக்க வேண்டும்.
 
நெய்வேத்தியங்களை வைத்த பின் சாம்பிராணி போட வேண்டும். பின் கற்பூர தீப ஆராதனை காட்ட வேண்டும். தீப ஆராதனை காட்டும் போது வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து “கோவிந்தா கோவிந்தா” என்று பெருமாளின் நாமத்தை கூறி வழிபட வேண்டும்.
 
கோவிந்தா என்று சொல்லி வழிபடும்போது நம் வீட்டில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் மறைந்து விடும். தீப ஆராதனை காட்டிய பின் பெருமாள் பாசுரங்களை பாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாட தெரியாதவர்கள் ஒலி வடிவில் பாசுரங்களை ஒலிக்க செய்து கேட்பதும் சிறப்பானதாகும்.
 
பின் நாம் பெருமாளுக்கு படைத்த நெய்வேத்தியத்தை முதலில் காக்கைக்கு வைத்து விட்டு பின்னர் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் முதலில் துளசி தீர்த்தத்தை கொடுக்க வேண்டும். படைத்த நெய்வேத்தியத்தை வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
 
இவ்வாறு விரதம் இருந்து புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாளை வழிபட்டால் சகல செல்வங்களும் வீட்டில் நிறைந்து நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கப் பெரும்.