செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எல்லா நன்மைகளையும் செல்வங்களையும் அள்ளி தரும் காமதேனு வழிபாடு...!!

காமதேனுவில் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டிருப்பதால் காமதேனுவை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வணங்கிய பெரும் பேறை அடைகிறோம். காமதேனுவிற்கு சுரபி என்றும் நந்தினி என்றும் வேறு இரு பெயர்களும் உண்டு.
 
நம்முடைய வீடு பூஜையறையில் ஒரு சில பொருட்களை வைத்து வழிபாடு செய்யும் பொழுது வீடு சுபிட்சமாக இருக்கும். நல்லது எல்லாம் நடக்கும். நினைத்தது நிறைவேறும் கேட்டது எல்லாம் கிடைக்கும். 
 
காமதேனு பசு கன்றுடன் கூடிய ஒரு சிலை. இந்த சிலையை உங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள். சிலை வாங்க முடியாதவர்கள் காமதேனு படத்தை வாங்கி பிரேம் செய்து உங்கள் பூஜையறையில் வையுங்கள். இந்த பசுவுடன் கூடிய கன்றை பூஜையறையில் வைத்து தினமும் பாலபிஷேகம் செய்ய வேண்டும். 
 
இந்த பசுமாட்டின் கொம்பு, நெற்றி, கால்கள், கன்று , பசுமாட்டின் மடி இவற்றிற்கு சந்தன குங்குமம் வைத்து மல்லிகை பூவை காமதேனுவிற்கு சமர்ப்பிக்க  வேண்டும். அதன் பிறகு இந்த காமதேனுவை தொட்டு வணங்கி உங்களுடைய கோரிக்கையை வைக்க வேண்டும். நியாயமாக நீங்கள் கேட்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நடக்கும்.
 
இந்த காமதேனுவை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதால் உங்களுடைய செல்வநிலை உயரும். பணவரவு அதிகமாகும். பல நல்ல விஷயங்கள் நடக்கும். மேலும் இந்த மந்திரம் சொல்லி வழிபாடு செய்ய அதிக நன்மைகள் நடக்கும்.

மந்திரம்:
 
ஓம் சுபகாயை வித்மஹே
காமதாத்திரியை
சதீமஹி தந்னோ தேனு
ப்ரசோதயத்
 
இந்த மந்திரத்தை தினமும் 54 முறை காமதேனு சிலை மீது உங்கள் கைகளை வைத்து சொல்லிவர வேண்டும். எல்லா நன்மைகளும் செல்வங்களும் உங்களுக்கு  கிடைக்கும்.