1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தினமும் பூஜை அறையில் தண்ணீர் வைப்பதால் இத்தனை பலன்களா....?

வீட்டின் பூஜை அறையில் தினமும் ஒரு மண் பானை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது மிகவும் நல்லது. இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.

அதேப்போல் நாம் தினமும் பூஜை அறையில் அமர்ந்து இஷ்ட தெய்வத்தின் மூல மந்திரத்தை கூறி தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் சொல்லும் மந்திரத்தின் அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். பிறகு அந்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.
 
அதேப்போல் தினமும் பூஜை அறையில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்து மறுநாள் காலையில் அந்த நீரை கூரையில் ஊற்றிவிட்டு மீண்டும் புதிதாக தண்ணீர் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் வீட்டில் துர்சக்திகள் இருந்தால் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.
 
அதேபோல் நாம் பூஜை செய்யும்போது மணி அடித்து சுவாமி தரிசனம் செய்வதால் துர்சக்திகள் நெருங்காது. மேலும் தெய்வீக சக்தி வீட்டில் இருக்கும். நாம் பூஜை அறையில் பூஜை செய்யும்போது ஐம்பூதங்களும் இருக்க வேண்டும். முதலாவதாக ஆகாயம் என்பது பூஜை அறையில் வியாபித்து இருக்கும். நிலம் என்பது நம்மை தாங்கி நிற்கிறது.
 
நெருப்பு விளக்கு ஏற்றும்போது இருக்கிறது. காற்று இயற்கையாகவே இருக்கிறது.ஆனால் தண்ணீர் மட்டும் இருக்காது.அதனால் நாம் பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஐம்பூங்களின் சக்தி நமக்கு கிடைக்கும் என்று ஐதீகத்தில் சொல்லப்படுகிறது.