புதன், 4 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பணப்பிரச்சனைகளை நீக்கும் எளிய கடன் நிவர்த்தி முறைகள் !!

கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். அதனை தீர்க்க சில எளிய பரிகார முறைகள் பற்றி பார்ப்போம்.

புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பணப்பெட்டியில் வைத்து வரவும். வெல்லத்தால் பாயசம் செய்து  தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
 
தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும். வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
 
கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை  சாற்றி வழிபடவும்.