ஞாயிறு, 24 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

18 சித்தர்களின் ஜீவசமாதி அமைந்துள்ள இடங்கள் எங்கு தெரியுமா....?

18 சித்தர்கள் பல்வேறு மூலிகை மருந்துகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர். தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி, யோகா, போன்ற கலைகளில் ஞானமுள்ளவர்களாகவும் இருந்துள்ளனர்.
ஞானிகள், சித்தர்கள் எண்ணற்றோர் இருந்தாலும் 18 சித்தர்களே குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் பிறந்து எத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை பற்றி  பார்ப்போம்.
 
பதஞ்சலி முனிவர் பிறந்தது பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில். 5 யுகம் 7 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் ராமேஸ்வரம்.
 
அகத்திய முனிவர் பிறந்தது மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில். 4 யுகம் 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சமாதியடைந்த இடம் திருவனந்தபுரம்.
 
போகர் பிறந்தது வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில். 300 வருடம் 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். ஆவினன்குடியில் சமாதியடைந்தார்.
 
கமலமுனி பிறந்தது வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில். 4000 வருடம் 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சமாதியடைந்த இடம் திருவாரூர்.
 
திருமூலர் பிறந்தது புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில். 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சிதம்பரத்தில் சமாதியடைந்தார்.
 
குதம்பை சித்தர் பிறந்தது ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில். 1800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். மாயவரத்தில் சமாதியடைந்தார்.
 
கோரக்கர் பிறந்தது கார்த்திகை மாத ஆயில்யம் நட்சத்திரத்தில். 880 வருடம் 11 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். பேரூரில் சமாதியடைந்தார்.
 
தன்வந்திரி பிறந்தது ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில். 800 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். வைத்தீஸ்வரன்கோவிலில் சமாதியடைந்தார்.
 
சுந்தரானந்தர் பிறந்தது ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில். 800 வருடம் 28 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். மதுரையில் சமாதியடைந்தார்.
 
கொங்கணர் பிறந்தது சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில். 800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருப்பதியில் சமாதியடைந்தார்.
 
சட்டமுனிபிறந்தது ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில். 800 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருவரங்கத்தில் சமாதியடைந்தார்.
 
வான்மீகர் பிறந்தது புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில். 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். எட்டுக்குடியில் சமாதியடைந்தார்.
 
ராமதேவர் பிறந்தது மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில். 700 வருடம் 06 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அழகர்மலையில் சமாதியடைந்தார்.
 
நந்தீசுவரர் பிறந்தது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில். 700 வருடம் 03 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். காசியில் சமாதியடைந்தார்.
 
இடைக்காடர் பிறந்தது புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில். 600 வருடம் 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.
 
மச்சமுனி பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்தார்.
 
கருவூரார் பிறந்தது சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில். 300 வருடம் 42 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். கரூரில் சமாதியடைந்தார்.
 
பாம்பாட்டி சித்தர்பிறந்தது கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில். 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சங்கரன்கோவிலில் சமாதியடைந்துள்ளார்.