வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. வெ‌ளி‌யீடுக‌ள்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2015 (05:24 IST)

வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேஷூக்கு பாராட்டு-பரிசு

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது.


 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 18ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி நெய்வேலி புத்தகக் கண்காட்சி அரங்கில் தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி ஜூலை 12ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
 
இக்கண்காட்சியில் நாள்தோறும் ஏதேனும் ஒரு படைப்பிலக்கியத் துறையில் சிறந்து விளங்கும் எழுத்தாளர் ஒருவருக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்படும்.
 
அந்த வகையில், குழந்தை இலக்கியத்தில் தொடர்ந்து சிறப்பான முறையில் படைப்புகளை படைக்கும் எழுத்தாளர் மு.முருகேஷூக்கு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுபாஷ் சந்திர பாரிஜா பாராட்டுச் சான்றிதழையும், ரூபாய்.5 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கிப் பாராட்டினார்.
 
எழுத்தாளர் மு.முருகேஷ் இதுவரை 8 கவிதை நூல்களையும், 6 ஹைக்கூ கவிதை நூல்களையும், 10 சிறுவர் இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். பல இலக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.