திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2017 கண்ணோட்டம்
Written By
Last Modified: சனி, 30 டிசம்பர் 2017 (15:07 IST)

2017 தமிழக அரசியல் ஒரு சிறப்பு பார்வை!

* ஜனவரி மாத இறுதியில் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது.
 
* ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதிமாறன், கலநிதிமாறன் உள்ளிட்ட அனைவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
 
* சட்டசபை அதிமுக கட்சித்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வராக முயற்சி செய்தார்.
 
* ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக முதன் முதலாக போர்க்கொடி தூக்கினார்.
 
* சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட அனைவரும் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து பெங்களூர் சிறையில் அவர்களை அடைத்தது.
 
* தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி.
 
* ரஜினியின் இலங்கை பயணம் அரசியலாக்கப்பட்டது.
 
* பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்று எலிக்கறி சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.
 
* பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
 
* சசிகலா, தினகரன் குடும்பத்தை கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் ஒதுக்கி வைப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறினர். இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அணி அதிமுகவில் புதிதாக உருவானது.
 
* சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
 
* சிஸ்டம் சரியில்லை என கூறி ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை வேகப்படுத்தினார்.
 
* திகார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் தனது அரசியல் விஸ்வரூபத்தை ஆரம்பித்தார்.
 
* கதிராமங்கலம் ஓஎன்ஜிசி எண்ணை குழாய்கள் கசிவு தொடர்பாகவும், அதனை நிறுத்த கோரியும் போராட்டம் வெடித்தது.
 
* நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
 
* நெடுவாசல் போராட்டம் தொடர்பாக துண்டு பிரசுரம் விநியோகித்ததாக வளர்மதி என்ற மாணவி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
 
* மெரினாவில் மெழுகுவர்த்தியுடன் நினைவேந்தல் செய்ய சென்ற மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
 
* ப்ளூவேக் கேம் தொடர்பான மரணங்கள் தமிழகத்திலும் அரங்கேறியது. விழுப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் அந்த கேம் பரவுவது தடுக்கப்பட்டது.
 
* தினகரனுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் அளித்தனர்.
 
* தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் பாண்டிச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
 
* தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் அதிரடியாக நீக்கினார்.
 
* நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் ஏழை மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
* அனிதாவின் தற்கொலைக்கு பின்னர் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் போராட்டங்கள் தீவிரமடைந்தது.
 
* தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ஓராண்டுக்கும் மேல் இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டு முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்.
 
* சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த சசிகலா தனது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக 5 நாட்கள் பரோலில் வந்தார்.
 
* மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் இருப்பதால் பாஜகவினர் எச்சரிக்கை விடுத்தனர்.
 
* ஓராண்டுக்கு பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த கருணாநிதி தொண்டர்களை சந்தித்தார்.
 
* இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை சசிகலா குடும்பத்தை குறிவைத்து 190 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்தினர்.
 
* குமரி மாவட்டத்தை ஓகி புயல் மிக தீவிரமாக தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்தனர், பல மீனவர்களை இதுவரை காணவில்லை.
 
* ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
 
* ஓகி புயல் மீட்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகள் துரிதமாக செயல்படாததால் மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 
* தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த வீடியோவை தினகரன் ஆதரவு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல் ஆர்கே நகர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னர் வெளியிட்டார்.
 
* ஆறு வருடங்களாக நடைபெற்ற 2ஜி வழக்கின் தீர்ப்பில் திமுகவின் கனிமொழி, அ.ராசா உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
 
* ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, திமுக வேட்பாளர்களை விட மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.